திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அசந்துத் துாங்கும் மணப்பெண் : வைரலாகும் காணொளி!!

703

திருமண நிகழ்ச்சியில்..

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமகன் பண மாலையுடன் நிற்கிறார். அவரது அருகேயுள்ள இருக்கையில் பட்டுப்புடவை, தங்க நகை அலங்காரத்துடன், மணப்பெண் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் செல்போனில் இதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார், இந்நிலையில் தற்போது இணைய தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதை பார்வையிட்ட பலரும், தூங்கும்போது மணப்பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று, பதிவிட்டு வருகின்றனர்.