சென்னை குண்டு வெடிப்பு : புதிய புகைப்படங்கள் வெளியாகின!!

617

B1 B2 B3

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான புதிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ஆம் திகதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 14 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குண்டு வெடிப்புக்குப் பின்னர் எடுக்கப்பட்ட பல புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதில் உயிரிழந்த சுவாதியின் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது போன்றும், குண்டு வெடித்த ரயில் பெட்டியில் பொருள்கள் சிதறி கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.