230 கிலோ மீற்றர் வேகத்தில் நேரலை.. அடுத்து நிகழ்ந்த விபரீதம்..!!

541

உத்தரப் பிரதேசத்தில்..

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ – காசிப்பூர் மாவட்டத்தை இணைக்கும் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில், கடந்த 15ஆம் திகதி நான்கு பேர் சொகுசு காரில் பயணித்துள்ளனர்.அப்போது தங்கள் பயணத்தை பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளனர். காரை ஓட்டிய ஆனந்த் பிரகாஷ் (35) வேகத்தை கூட்டிக் கொண்டே செல்கிறார்.

காரின் வேகம் 230-ஐ எட்டும்போது நபர் ஒருவர் 300 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லுமாறு கூறுகிறார். மேலும் ஒருவர் நாம் 4 பேரும் சாகப்போகிறோம் என கூச்சலிடுகிறார்.அதன் பின்னர் சாலையில் எதிரே வந்த லொறி ஒன்றின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகத்தில் கார் மோதியதால் அதில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர்.இறப்பதற்கு முன் அவர்கள் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.