20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர் : கதறும் இளைஞர்கள்!!

559

70 வயது முதியவர்..

70 வயது முதியவர் ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையம் என்பது பல வீடியோக்கள் நிறைந்த உலகம்.

சமூக ஊடகங்களில் பல்வேறு சமயங்களில் நாம் வினோத வீடியோக்கள் பார்ப்பதுண்டு. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.

இங்கு திருமண மண்டபத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் 20 வயது பெண் அருகே மாலையுடன் உட்கார்ந்து இருக்கிறார். மணமகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் அந்த 70 வயது மணமகன் அமைதியாக இருக்கிறார்.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் இந்த மணமக்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த காட்சியை அவதானித்த இளைஞர்களும் கதறி வருகின்றனர்.