இலங்கையில் உப்பை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்!!

1080

உப்பை உட்கொள்வதால்..

இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றன.

நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் இவர்கள் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே தேவைப்படுகின்ற போதிலும், அநேகமானோர் அதிகளவான உப்பை உட்கொள்கின்றனர். இதனால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.