குருநாகல் பொலிஸ் கொலை குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் பரிசு!!

895

police

குருநாகல் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏதெனும் தகவல் அறிந்து அதனை தெரிவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா பரிசளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கடத்தப்பட்டு அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று (06) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் சம்பத் (இல 41497) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த விஜயசூரிய (இல 34098) குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.