ஆபாச சேவல் நடன வழக்கை நிராகரித்த பிரான்ஸ்!!(வீடியோ)

300

Dance

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் முன்னால் நபர் ஒருவர் சேவல் நடனம் ஆடியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரானது பழமை வாய்ந்த கோபுரமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஈபிள் டவர் முன்னாள் காலை 9.30 மணியளவில் ஸ்டீவன் கோகன் என்பவர் சேவல் போன்ற தோற்றத்தில் தோன்றியுள்ளார். மேலும் அவர் உயரமான காலணிகள் அணிந்திருந்தார்.

தன்னுடைய ஆண்குறியில் இருந்து சேவலின் கழுத்து வரை ஒரு ரிப்பனால் கட்டியிருந்தார். சிவப்பு நிறத்தால் தன்னுடைய கைகளில் கையுறை மற்றும் தலைகளின் மேல் இறக்கைகள் ஆகியவற்றை அணிந்து மொத்தத்தில் சேவல் போன்ற தோற்றத்துடன் மக்கள் முன்னிலையில் 10 நிமிடங்கள் நடனம் ஆடியுள்ளார்.

இந்த நடனத்தைப் பார்த்து சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

தென்னாரிக்காவை பிறப்பிடமாக கொண்ட கோகன் என்ற இப்பெண்மணி தற்போது வடக்கு பிரான்சில் வசித்து வருகிறார். இவர் ஒரு கலைஞராவார்.

கோகன் செய்தது அவமானத்திற்குரிய செயல் என்று கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வழக்கானது நீதிமன்றத்துக்கு வந்துள்ளது.
தற்போது நீதிமன்றம் கோகன் எந்தவித பாலியல் மற்றும் ஆபாசத்தில் ஈடுபட வில்லை என கூறி வழக்கை நிராகரித்துள்ளது.

இதுகுறித்து கோகன் கூறுகையில், இந்த வழக்கு தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், மேலும் இதில், தன் கலையை தவறு என்று கூறிவிட்டு அதற்கு தண்டனை இல்லை என்று கூறுவது போல் உள்ளது என கூறியுள்ளார்.