இந்தியாவில் இருந்து எத்தனையோ படங்கள் ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவை சிறந்த படங்களாக இருந்தபோதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் ஒஸ்கர் விருது குழு அவற்றை நிராகரித்து வந்தது.
அதன்காரணமாக, ஒரு ஹொலிவுட் பட நிறுவனம் தயாரித்த ஸ்லம்டோக் மில்லியனர் என்ற படத்துக்கு இசையமைத்து இரண்டு ஒஸ்கர் விருதுகளை தட்டி வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதையடுத்து ஹொலிவுட்டில் அவருக்கான வரவேற்பு அதிகரித்து விட்டது. அதனால் அதன்பிறகு 127 ஹைவேஸ் என்ற ஹொலிவுட் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மில்லியன் டொலர் ஆம் என்றொரு படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த ஆங்கில மொழிப்படத்தின் இறுதியில் டைட்டீல் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒரு தமிழ்ப்பாடலை இணைத்துள்ளாராம்.
அந்த பாடலை உன்னி கிருஷ்ணன்-சித்ரா ஆகியோர் பாடியுள்ளார்களாம். மே 15ம் திகதி ஹொலிவுட்டில் வெளியாக உள்ள இப்படம் முன்னதாக, வருகிற 9ம் திகதியே இந்தியாவில் ரிலீசாக உள்ளது.
ஒஸ்கர் விருது பெற்றபோது, எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் உச்சரித்த ஏ.ஆர்.ரஹ்மான். இப்போது ஒரு ஹொலிவுட் படத்தில் தமிழ்ப்பாடலையே இணைத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.






