8 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழில் நடிக்க வரும் குட்டி ராதிகா!!

1239

Radhika

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கன்னட நடிகை குட்டி ராதிகா. அதன் பிறகு வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா, உள்பட சில படங்களில் நடித்தார். 2006ம் ஆண்டு நடித்த உள்ளக் கடத்தல் படம்தான் கடைசி படம்.

அதன் பிறகு பெங்களூருவிலேயே செட்டிலாகிவிட்ட ராதிகா. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமியை ரகசிய திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இதனை வெளிப்படையாக அறிவித்தார்.

குட்டி ராதிகா இப்போது கன்னடத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். தமிழில் மீண்டும் நடிக்கும் ஆசையில் இருந்தார். அது மீண்டும் அம்மன் படத்தின் மூலமாக நடக்க இருக்கிறது. கோடி ராமகிருஷ்ணா இயக்கிய அம்மன் படம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது அவர் அவதாரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் மீண்டும் அம்மன் என்ற பெயரில் தமிழில் ரிலீசாகிறது. இதில் அம்மனாக பானுப்ரியா நடித்துள்ளார். அவரது பக்தையாக குட்டி ராதிகா நடித்துள்ளார். குட்டி ராதிகாவின் கணவராக ரிச்சர்ட் நடித்துள்ளார். ராதிகாவுக்கு வரும் பிரச்னைகளை அம்மன் தீர்த்து வைக்கிற கதை.

இந்தப் படத்திற்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் குட்டி ராதிகா.