அயர்லாந்து அணியுடனான முதல் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றி!!

516

SL

அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி சார்பில் நுவண் குலசேகர ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் சந்திமால் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 39.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஜந்த மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.