இனி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட மாட்டேன் : முத்தையா முரளிதரன்!!

489

Murali

பெங்களூர் அணிக்காக விளையாடும் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்த ஐ.பி.எல் தொடர், தான் விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் சுழல் வித்தைக்காரர் என அழைக்கப்படும் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கடந்த 50 ஓவர் உலகக்கிண்ணத்தில் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் முத்தையா, 7வது ஐ.பி.எல் தொடரின் ஒரு போட்டியில் விளையாடியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் மூத்த வீரர்களில் ஒருவரான முத்தையா இந்த ஐ.பி.எல் 7வது தொடர் எனக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஓய்வு பெற்ற பிறகு சாதிக்க ஒன்றும் இல்லை.

இந்திய அணியில் திறமை மிக்க சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹர்பஜன் சிங் மீண்டும் அணியில் விளையாடுவதன் மூலம் அவரது வழக்கமான விளையாட்டு தொடர வேண்டும்.

மேலும் 11 பேர் கொண்ட அணியில் ஒரே நேரத்தில் இரு சுழல் பந்து வீச்சாளர்கள் இருப்பது சாத்தியமில்லை. ஆனால் அஸ்வின், ஜடேஜா என இருவரும் கடந்த இரண்டு வருடமாக அசத்தலாக விளையாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.