கருத்தரித்திருப்பது தெரியாமலேயே ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்த தாய்!!

602

Baby

கருத்தரித்திருப்பது பற்றி தெரியாமலேயே காலி, உடுகம பிரதேசத்தில் தாய் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

கடுமையான வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்ட குறித்த பெண், ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

கருத்தரித்திருப்பது அல்லது வயிற்றில் குழந்தை இருப்பது பற்றி கணவன் மனைவி இருவரும் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 36 வயதான குறித்த பெண்ணின் ஆறாவது குழந்தை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தரித்திருப்பது பற்றி தெரியாது கணவனும் மனைவியும் கடின உழைப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், வயிற்றில் கட்டி இருப்பதாக கருதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வயிற்றில் ஏற்பட்டுள்ள கட்டி தொடர்பில் சிகிச்சை பெற்றுக்கொள்ள காலி வைத்தியசாலைக்கு செல்லவிருப்பதாக பெண், உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் திடீரென ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் 2600 கிராம் எடையுடைய ஆரோக்கியமான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.