ஸ்பைடர்மேன் 2 புதிய சாதனை : 4 நாளில் ரூ.41 கோடி வசூல்!!

453

SPider

ஸ்பைடர்மேன் 2 படம் கடந்த 2ம் திகதி இந்தியா முழுவதும் ரிலீசானது. 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் 42 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. மொத்தம் 1523 தியேட்டர்களில் வெளியிட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் 41.7 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக சோனி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் கெர்சிதரு வாலா தெரிவித்துள்ளார்.

இதுவரை வந்த ஸ்பைடர்மேன் படங்களில் இதுதான் சிறந்த படம் என்று ரசிகர்கள் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். காதலுக்கும், பொறுப்புகளுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஸ்பைடர் மேனின் போராட்டமே கதை. ஆண்ட்ரூ கார்பீல்டு, டேன் டிஹான் நடித்துள்ளனர். மார்க் வேப் இயக்கியுள்ளார். சண்டை காட்சிகளும், விசுவல் எபெக்ட்களும் சீட் நுனிக்கு இழுக்கும் பிரமாண்டங்களாக அமைந்துள்ளன.