அளுகோசு பதவிக்கு அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியாவில் இருந்து அறுவர் விண்ணப்பிப்பு!!

1017

Hangகுற்றவாளிகளை தூக்கிலிடும் தொழில் செய்யும் அளுகோசு என்ற பதவி பெயரில் மாற்றம் கொண்டுவரவென முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

200 புதிய பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார். இதில் தெரிவு செய்யப்படும் பெயர் அரச நிருவாக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் என அவர் குறிப்பிட்டார்.

வெற்றிடமாகியுள்ள அளுகோசு பதவிக்கு இதுவரை 50 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறினார். அதில் 6 வெளிநாட்டவர்கள் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியாவில் இருந்து அளுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.