இணையத் தேடலில் கோஹ்லி சாதனை!!

443

Kholi

ரசிகர்களால் இணையத்தில் அதிகம் தேடப்படும் வீரர்களில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தில் உள்ளார்.

கோஹ்லிக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 2வது இடத்தையும், பெரிய அளவிலான ஓட்டங்களை அடிக்கவில்லை என்ற போதும் யுவராஜ் சிங் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மூவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். டிவில்லியர்ஸ் அடிந்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அருகே அற்புதமாக் கேட்ச் பிடித்த கொல்கத்தா வீரர் கிறிஸ் லீன் 4ம் இடத்தில் உள்ளார்.

இவர்களைத் தவிர சேவாக், மேக்ஸ்வெல், கம்பீர், கெய்ல், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவன் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.