குழந்தைக்கு எமனாக மாறிய சாக்லேட்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

666

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் வரங்கல் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி லைனில் வசித்து வரும் கன் கஹான் சிங்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் இரண்டாவது மகன் சந்தீப் (8).

அப்பகுதியில் உள்ள சாரதா தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, தாய் கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டு கொண்டிருந்த சந்தீப், பள்ளியின் முதல் மாடிக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக பள்ளி ஊழியர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் சாக்லேட் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக சந்தீப் உயிரிழந்தார்.