சிக்ஸர் அடிக்க தடைவிதித்த இங்கிலாந்து நீதிமன்றம்!!

459

Six

இங்கிலாந்தில் உள்ள ஒரு கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் சிக்ஸர் அடிக்க தடை விதித்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் சிக்ஸர் என்பது சாதாரணமாக அனைத்து துடுப்பாட்டக்கார்களால் அடித்து விளாசப்படுகிறது.

ஐ.பி.எல் மட்டுமல்லாது 20 ஓவர் கிரிக்கெட் என்றாலே சிக்ஸர்களால் மட்டுமே ரசிகர்களால் அதிகம் பிரபலம் அடைந்தது.
இப்படி சிக்ஸர் அடிக்கும் அணிக்கு, இனி சிக்ஸர் அடிக்கக் கூடாது என தடை விதித்தால் எப்படியிருக்கும்?

அப்படி ஒரு தர்மசங்கடமான நிலைதான் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் அணி ஒன்றுக்கு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் ஷையரில் உள்ள பிரிட்வெல் சாலோம் கிரிக்கெட் அணியினர் அப்பகுதியில் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவர். அப்போது இந்த வீரர்கள் சிக்சர் அடித்தால், பந்து அருகே உள்ள தோட்டத்தில் போய் விழும்.

எனவே அந்த பந்தை எடுக்க வீரர்கள் அடிக்கடி தோட்டத்துக்குள் நுழைந்ததால், அந்த தோட்டம் சேதமடைந்தது.பொறுத்து பொறுத்து பார்த்த தோட்டக்காரர், கிரிக்கெட் அணியினரை நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதியும், கிரிக்கெட் அணியினர் சிக்சர் அடிக்க தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.