அந்த நடிகையுடன் திருமணமா : குமுறும் பிரபல நடிகர்!!

438

THileep

நவ்யா நாயரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல நடிகர் சைபர் கிரைம் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். இவர் கடந்த 2010ம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்ற மும்பை தொழில் அதிபரை மணந்தார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது நவ்யா, கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இவருக்கும், மல்லுவுட் ஹீரோ திலீப்புக்கும் திருமணம் நடக்க உள்ளதாக இணையத் தளங்களில் அடிக்கடி தகவல் வந்த வண்ணம் உள்ளது.

அதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில், ஜூன் மாதம் 25ம் திகதி நவ்யாவை மணக்க உள்ளதாக திலீப்பே தனது இணைய தளத்தில் தகவல் வெளியிட்டிருந்ததை கண்டு பலர் ஷாக் ஆகினர். இதை திலீப் தரப்பு மறுத்திருக்கிறது.

திலீப் இணைய தள டுவிட்டர் பக்கத்தில் இணையவில்லை. யாரோ அவரது பெயரை போலியாக பயன்படுத்தி அவர் சொல்வதுபோல் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் தரப்பட்டுள்ளது என்றனர். நவ்யாவின் அம்மா கூறும்போது, திருமண செய்தியில் உண்மை இல்லை. இதுபோல் தகவல் வருவது இதுமுதல் தடவை கிடையாது. நவ்யாவுக்கு திருமணம் செய்வதுபற்றி எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை என்றார்.

ஏற்கனவே திலீப் மல்லுவுட் நடிகை மஞ்சுவாரியரை மணந்திருக்கிறார். இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகள் தந்தை திலீப்புடன் வசிக்கிறார்.