சிம்பு – நயன்தாராவை மீண்டும் சேர்ந்து வைத்த அந்தப் பெண் யார் தெரியுமா?

434

SImbu

பல வருட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நயன்தாரா இருவரும் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றநிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவில்லை. எனவே, இது நம்ம ஆளு படம் ட்ராப் என்று திரையுலகில் பேசப்பட்டு வந்தது.

இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவை சிம்பு தனக்கு ஜோடியாக்கியதே அவருடன் மறுபடி காதலை புதுப்பிக்கத்தான் என்றும், சிம்புவின் திட்டம் பலிக்கவில்லை என்றும், அந்த கடுப்பில்தான் இது நம்ம ஆளு படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கப்போய்விட்டார் சிம்பு என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் மே 25 முதல் இது நம்ம ஆளு படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக திரையுலகில் தகவல் அடிபடுகிறது. சிம்பு உடன் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டதே இரண்டு கோடி சம்பளத்துக்காகத்தான் என்றும், எனக்கு சிம்புவும் ஒண்ணுதான் சிவகார்த்திகேயனும் ஒண்ணுதான் என்றும் நயன்தாரா அடித்த கமெண்ட்டுகள் சிம்புவை விரக்தியடைய வைத்திருந்தது.

அதன் காரணமாக நயன்தாரா மீது செம கடுப்பிலும் இருந்தார் சிம்பு என்று சொல்லப்பட்டது. பிறகு எப்படி மறுபடி இது நம்ம ஆளு படத்தில் நடிக்க சம்மதித்தார். இடையில் என்ன நடந்தது, சிம்புவை சமாதானப்படுத்தி, நயன்தாரா உடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் இருவருக்கும் பொதுவான ஒரு லேடி.

அந்த சந்திப்பு நடைபெற்றது – த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியில். சிம்பு – நயன்தாரா இருவரையும் அங்கே வரவழைத்த அந்த லேடி, அவர்களை சமாதானப்படுத்தி கைகுலுக்க வைத்திருக்கிறார். அந்த சந்திப்புக்குப் பிறகு சிம்புவும் நயன்தாராவும் சாந்தமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவத்துக்குப் பிறகே மீண்டும் தொடங்குகிறது இது நம்ம ஆளு.