82 வயதான கணவரும் 72 வயதான மனைவியும் சுகவீனமடைந்து ஒரே நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒரே தினத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் காலி எல்பிட்டிய வைத்தியசாலையில் நடந்துள்ளது.
பலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் கொஸ்கொடவில் வசித்து வந்த 82 வயதான ஹேனபடல்கே முனிஸ் என்ற கணவரும் 72 வயதான அந்தோணி வெரலகே ரொசலின் என்ற மனைவியுமே இவ்வாறு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இருவரும் கடந்த 4 ஆம் திகதி சுகவீனமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் மனைவி இறந்ததுடன் கணவரும் சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளார்.