இலங்கை மீனவர்கள் 11 பேர் சென்னை கடற்பரப்பில் கைது!!

512

FIsh

சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த மீனவர்களிடம் இரண்டு தொன் எடை கொண்ட மீன்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சென்னை துறைமுகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை 31 இலங்கை மீனவர்கள் அண்மையில் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.