பொலிஸ் கொலை சந்தேகநபர்கள் இவர்கள்தான் : தகவல் வழங்கினால் 10 லட்சம் பரிசு!!

573

Person

குருநாகல் பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸாரை கொலை செய்தமை மற்றும் அதே தினத்தன்று வேவெல்தெனிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரது புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த நபர்கள் குறித்த தகவல்களை அறிந்தவர்கள் 0772659336 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (11) இடம்பெற்ற ஊகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த தகவலை தெரிவித்துள்ளார். சரியான தகவலை வழங்குபவருக்கு 10 லட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 8ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் முகத்தை முழுமையாக மூடிய தலைக் கவசத்தை அணிந்த கொள்ளைச் சம்பவங்கள் 97 இடம்பெற்றுள்ளன.

இதன்படி கல்கிஸ்ஸை பொலிஸ் பிரதேசத்தில் 26, நுகேகொடை பிரதேசத்தில் 11, காலி பிரதேசத்தில் 08, இரத்தினபுரி பிரதேசத்தில் 05, பாணந்திரை பிரதேசத்தில் 07 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.