80 வயது மூதாட்டி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை!!

592

Abuse

மூதாட்டி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அலவத்துகொட ரம்புக்கேஹெல வீதியில் உள்ள வீடொன்றில் 80 வயதான பெண்மணியின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட வயோபதிபப் பெண்மணி திருமணம் செய்யாதவர் எனவும் அவர் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூதாட்டியை நிர்வாணப்படுத்தி பொல்லு ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அந்த மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.