வவுனியாவில் குளங்களின் நீர் மட்டம் குறைவாகவுள்ளமையினால் வயல்கள் அழிவடையும் நிலையில்!!

741

குளங்களின் நீர் மட்டம்..

வவுனியாவிலுள்ள குளங்களின் நீர் மட்டம் குறைவாகவுள்ளமையினால் வயல்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் வவுனியா பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா ராஜகோபு தெரிவித்தார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டில் கீழ் 18 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 17 குளங்களுடான நீர்ப்பாசன திட்டமும் ஒன்று அணைக்கட்டினூடான நீர்ப்பாசன திட்டமும் காணப்படுகின்றன.

அவற்றில் மகாகச்சக்கொடியகுளம், வேலன்குளம், அலியாமருதமடுகுளம், நஞ்சடிச்சபழம் அணைக்கட்டு ஆகிய நான்கு குளங்களின் நீர்மட்டம் 5 வீகிதமாகவே காணப்படுகின்றமையினால்,

இக் குளங்களின் கீழுள்ள வயல்கள் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் ஏனைய குளங்களின் நீர்மட்டம் அண்ணளவாக 33 விகிதமாக காணப்படுகின்றது.

மாவட்டத்தில் இனிவரும் இரு வாரங்களுக்கு மழை வீழ்ச்சி குறைவாக காணப்படுமாயின் மாவட்டத்திலுள்ள ஏனைய குளங்களின் நீர்மட்டமும் குறைவடைந்து அதன் கீழுள்ள வயல்களும் பாதிப்படையும் நிலமை உருவாகியுள்ளது.

வழமையான இம்மாதமாளவில் குளங்களின் நீர்மட்டம் 75 வீதமாக காணப்படும். ஆனால் வவுனியா மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவாக காணப்பட்டமையினாலேயே குளங்களின் நீர் மட்டம் குறைவாக காணப்படுகின்றது.

மாவட்டத்திலுள்ள 18 குளங்களின் கீழ் 6035 ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுவதுடன் 1945 பயனாளிகள் காணப்படுகின்றனர். அழிவடையும் நிலையில் காணப்படும் நான்கு குளங்களில் கீழ் 285 பயனாளிகள் காணப்படுகின்றனர் என தெரிவித்தார்.