வவுனியா வேப்பங்குளத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

631

சிரமதானப்பணி..

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையினை டெங்கு அற்ற பகுதியாக மாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் சிரமதானப்பணி இன்று (11.12.2022) காலை முன்னெடுக்கப்பட்டது.

சிலுவ அறக்கட்டளை அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இச் சிரமதானப்பணியில் அப்பகுதி இளைஞர்கள் பலர் தாமாக முன்வந்து வீதியின் அருகே காணப்பட்ட,

பற்றைகள், போத்தல்கள் என்பவற்றினை அகற்றி சிரமதானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியமையிருந்தமையுடன் வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை முழுவதுவமாகஇச் சிரமதானப் பணி இடம்பெற்றிருந்தது.

மேலும் பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம அமைப்புக்கள், கிராம சேவையாளர் போன்றவர்களும் இச் சிரமதானப் பணியில் பங்கெடுத்திருந்தமையுடன் நகரசபையினரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.