சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 62 வயதான தோட்டம் ஒன்றின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் – விஜய கட்டுப்பத்த பிரதேசத்தில் உள்ள தனியார் தென்னந்தோட்டம் ஒன்றின் நிர்வாகியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
8 வயதான இந்த சிறுமி தாய், தந்தை மற்றும் சகோதருடன் சந்தேக நபரின் நிர்வாகத்தில் இருக்கும் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கடந்த 9 ஆம் திகதி பாடசாலைக்கு சென்று திரும்பிய சிறுமி வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற சந்தேக நபர் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று இந்த குற்றத்தை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவராவது கேட்டால் தனது சித்தப்பா இந்த குற்றத்தை செய்தாக கூறுமாறும் சந்தேக நபர் சிறுமியிடம் கூறியுள்ளார்.
எனினும் சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





