சிகரெட் பெட்டியில் 50-60% சுகாதார எச்சரிக்கை விளம்பரத்திற்கு நீதிமன்றம் அனுமதி!!

690

Cigrate

சிகரெட் பெட்டியொன்றில் 50 – 60 சதவீதமான பகுதியில் புகைத்தலால் ஏற்படும் சுகாதார சீர்​​கேடுகள் குறித்து விளம்பரம் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் சுகாதார அமைச்சுக்கு இன்று அனுமதி அளித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகைத்தல் சௌக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பதனை எடுத்துக்காட்டுகின்ற படங்களை சிகரெட் பெட்டிகளில் பிரசுரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சிகரெட் பெட்டிகளில் 80% சுகாதார எச்சரிக்கை விளம்பரம் பிரசுரிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்தார். எனினும் புகையிலை நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் சிகரெட் பெட்டியொன்றில் 50 – 60 சதவீதமான பகுதியில் புகைத்தலால் ஏற்படும் சுகாதார சீர்​​கேடுகள் குறித்து விளம்பரம் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.