இரண்டாவது மனைவியை கொல்ல ஒரே இரவில் 2 முறை விஷப்பாம்பை ஏவிய கணவன்… இறுதியில் நடந்த திருப்பம்!!

489

இந்தியாவில்..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவரது முதல் மனைவி சானு பி சில ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதை தொடர்ந்து அவர் அஜ்மேரி ஹலிமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரிந்து சென்ற முதல் மனைவி சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டார்.இப்போது மோஜிமுக்கு இரண்டாவது மனைவியை பாரமாகிவிட்டார்.இதனால் 2 வது மனைவியை தீர்த்துகட்ட திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நண்பர் ஒருவருடன் பேசி விஷப்பாம்புடன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பாம்பு பிடிப்பவர் மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்பான ரஸ்ஸல் வைப்பருடன் மோஜிமின் வீட்டிற்கு சென்று உள்ளார்.

ஜன்னல் வழியாக பாம்பை விட்டிற்குள் விட்டு உள்ளார். வீட்டில் 2வது மனைவி ஹலிமா மட்டும் இருந்துள்ளார்.அதே இரவில் ஹலிமாவை பாம்பு கடித்துள்ளது.காலையில் ஹலிமா இறந்துவிடுவார் என்று மோஜிம் எதிர்பார்த்தார். காலையில் ஹலிமா எழுந்ததும், மோஜிம் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் அவரை பிடித்து பாம்பை கடிக்க வைத்தனர்.

ஹலிமா சத்தம் போட்டு உள்ளார் உடனடியாக அக்கம்பக்கத்தினரை விரைந்து வந்து ஹலிமாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவர், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததால், அவரது உயிர் பிழைத்து விட்டார். இந்த வழக்கில் கணவர், பாம்பு பிடிப்பவர் உட்பட ஐந்து பேரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு முறை இவ்வளவு கொடூர விஷப்பாம்பு கடித்தும் ஹலிமாவின் உயிர் பிழைத்தது எப்படி? அப்படியானால் சில சமயங்களில் இதுபோன்ற பாம்புகள் பொய் கடியும் கடிக்கின்றன, அந்த கடியின் போது விஷம் அதன் உடலை விட்டு வெளியேறாது என கூறப்படுகிறது.