உத்தரபிரதேசத்தில்..
நாட்டில் நாளுக்கு நாள் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காதலியை கொன்று பிரிட்ஜுல் வைப்பது, கணவனை கொன்று பல துண்டுகளாக துக்கி எரிவது, கணவன் மனைவிக்கு விஷம் கொடுப்பது என என்னற்ற குற்றச்சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.
அதுவும் குடும்பத்திற்குள் நடக்கு கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரை சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக்.
இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (28). அபிஷேக் ஒரு ஆயுர்வேத டாக்டராவார். சீதாபூர் சாலையில் சொந்தமாகவே மருத்துவமனை ஒன்றை நிர்வகித்து வருகின்றனர் அபிஷேக்.
நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தன் மனைவியை காணவில்லை என்று டாக்டர் அபிஷேக், கோத்வாலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன், விலை உயர்ந்த சில பொருட்களை, வீட்டில் இருந்து மனைவி எடுத்து சென்றுவிட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போதுதான், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்து போயுள்ளது தெரியவந்தது. அதனால், அபிஷேக் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்ததுள்ளது.
எனவே, அபிஷேகிற்கு தெரியாமல் அவரது நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணித்த ஆரம்பித்துள்ளனர். சந்தேகம் வலுக்கவே, தங்கள் பாணியில் விசாரிக்க, அப்போதுதான் நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டிருகிறார் அபிஷேக்.
சம்பவத்தன்றும் தம்பதிகளுக்குள் வழக்கம்போல் தகராறு வந்துள்ளது. ஆத்திரத்தில் இருந்த அபிஷேக், மனைவியை அடித்துள்ளார். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அபிஷேக், சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல், மனைவியின் உடலை சுமார் 400 கிமீ தொலைவிற்கு கொண்டு சென்று, யாருமற்ற பகுதியில் போட்டு தீ வைத்து எரித்துள்ளார்.
இந்த கொலைக்கு அவரது அப்பாவும் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.