கர்நாடகாவில்..
பெற்றோர் எதிர்ப்பையும் மீறி பாக்யஸ்ரீ, புஜபாலியை பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெலகாவி மாவட்டத்தில் 2 பேரும் வீடு வாடகை எடுத்து 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் பெண்ணின் தந்தை மருமகன் என்று கூட பாராமல் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொடூரமாக ஆணவ கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியை சேர்ந்தவர் தம்மனகவுடா. இவரது மகள் பாக்யஸ்ரீ என்பவர் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த புஜபாலி கர்ஜகியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இருவீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி பாக்யஸ்ரீ, புஜபாலியை பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெலகாவி மாவட்டத்தில் 2 பேரும் வீடு வாடகை எடுத்து 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி அங்கு தனியாக வீடு வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த புஜபாலாவை பெண்ணின் தந்தை தம்மனகவுடா வழிமறித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மருமகன் என்றும் பாராமல் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த புஜபாலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் இது ஆணவ கொலை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தையை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.