யாழில் இளம் பெண் மீது வாள்வெட்டு!!

516

knife1

இனந்தெரியாத நபர்கள், இளம்பெண்ணொருவரை வாளால் வெட்டிய சம்பவமொன்று இன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் நுணாவில் மேற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தர்சிகன் சாந்தினி(27) என்ற குடும்பப் பெண் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டுவளவில் நின்றவேளை, அங்கு திடீரென வந்தவர்கள் வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த அவர், சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுதொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.