பிரியாணி சாப்பிட்ட அடுத்த நிமிடமே இளம்பெண் மரணம்.. தொடர்ந்து அரங்கேறும் துயரம்!!

376

கேரளாவில்..

கேரளாவில் ரேஷ்மி என்ற செவிலியர் நேற்று பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததையடுத்து இன்றும் 20 வயது பெண் ஒருவர் இறந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

கேரளாவில் சமீப நாட்களாக உணவே விஷமாகி அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டு வருகின்றது. ஆம் ஆன்லைன் மூலமாக பிரியாணி உணவான குழிமந்தி வாங்கி சாப்பிட்ட பெண் பலியாகியுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் கடந்த மாதம் 31ம் தேதி ஆன்லைன் மூலம் ரோமன்சியா என்ற உணவகத்தில் குழி மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பிரியாணி சாப்பிட்ட பின்பு உடல்நிலை சரியில்லாமல் ஆன நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், பின்பு மேல் சிகிச்சைக்காக கர்நாடாக மாநிலம் மங்களூரில் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பெற்றோர்கள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தடயவியல் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸார் தெரிவித்தனர்.

கெட்டுப்போன உணவினை வழங்கியதாக குற்றம் சாட்டப்படும் ஹோட்டல்களின் உரிமம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் (FSSA) கீழ் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் ரேஷ்மி என்ற செவிலியர் மந்தி பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததையடுத்து குறித்த உணவகம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.