
அமலாபாலுக்கும், இயக்குனர் விஜய்க்கும் அடுத்த மாதம் (ஜூன்) 12ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக 7ம் திகதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.
அமலாபால் தமிழ், தெலுங்கில் நிறைய ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். நிறைய புதுப்பட வாய்ப்புகளும் வருகின்றன. திருமணத்துக்கு பிறகு அவர் நடிப்பாரா அல்லது சினிமாவை விட்டு விலகுவாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. இதற்கு அமலாபால் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கும் திட்டம் இல்லை. திருமணமானதும் குடும்பத்துக்குதான் நான் முக்கியத்துவம் அளிப்பேன். திருமணத்துக்கு பின் ஏதேனும் பிரமாதமான கதை அமைந்தால் நடிப்பது குறித்து அப்போது யோசிக்கலாம்.
தற்போது திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளேன். எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள நான் எடுத்த முடிவில் எந்த குழப்பமும் இல்லை.
திருமணத்துக்கு யாரும் என்னை நிர்ப்பந்திக்கவும் இல்லை. முழு மனதோடுதான் இந்த முடிவை எடுத்தேன். இப்போது மிலி என்ற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்கிறேன். வேறு புதுபடங்கள் எதற்கும் ஒப்பந்தம் ஆகவில்லை. என்று அமலாபால் கூறினார்.





