வட்சன் புதிய சாதனை!!

471

Watson

சென்னை அணிக்கெதிரான நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணித்தலைவர் வட்சன் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐ.பி.எல் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் முடிந்த அளவு தங்கள் திறமையை வெளிக்காட்டினர். இருப்பினும் சென்னை அணியிடம் ராஜஸ்தான் வீழ்ந்தது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் சிறந்த வீரராக விளங்கும் வட்சன், ஐ.பி.எல் போட்டிகளில் 2000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.

இவர் இதுவரை விளையாடிய 65 ஆட்டங்களில் 2012 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் வாட்சன் 14வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.