காதலிக்காக நடுவீதியில் சண்டை போட்ட கோடீஸ்வரர் : பார்த்து சிரித்த மனைவி!!(வீடியோ)

502

அவுஸ்திரேலியாவில் பிரபல கோடீஸ்வரர்கள், காதலிக்காக நடுத்தெருவில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஜேம்ஸ் பெக்கர் மற்றும் டேவிட் கைனெல் ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆவார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான இவர்கள் தெரு ஒன்றில் வைத்து மோதிக் கொண்டது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேம்ஸ் பெக்கர் திருமணமாகி, தனது மனைவியுடன் இருந்த போதிலும், தற்போது மொடல் அழகியான கெர் என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். இந்த உறவினை, தனது நண்பனான, டேவிட்டிடம் எடுத்துக் கூறும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் இருவதும் தெருவிலேயே கட்டி உருண்டு சண்டை போட்டுள்ளனர். இந்த காட்சி ஒரு பிரபலமான ஹோட்டல் கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்த குற்றத்திற்காக இவர்கள், இவருவருக்கும் தலா 30 000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டேவிட் கைனெல் தன் மீது தான் குற்றம் இருப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெக்கரின் மனைவியான லைலா கூறுகையில், இந்த சம்பவம் சிரிப்பாகவும், வேடிக்கை அளிப்பதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

1 2 3 4