அளுகோசு என்ற பெயருக்கு பதிலாக 12 பெயர்கள் முன்மொழிவு!!

878

Alukosu

அளுகோசு என்ற பதவி பெயரில் மாற்றம் கொண்டுவரவென முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் 12 தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு 200 பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில் அவை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

அதில் 50 பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் 12 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் இறுதி முடிவை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.