கடலூரில்..
கடலூரில் திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் தெருவில் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்து உள்னனர் விக்னேஷ் – கெசியாள்.
விக்னேஷ் படிப்பு முடித்து விட்டு உள்ளூரில் வேலைகளை பார்த்து வந்துள்ளார். கெட்சியாள் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். எதிர் எதிர் வீட்டில் அடிக்கடி பார்த்துக்கொள்ளும் இவர்கள் காதலில் விழுந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
கெசியாளின் தாயார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் கெசியாள் திருமணத்திற்கு அவரின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் இதை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.
இதையடுத்து தன் வீட்டின் எதிர்ப்பை மீறி கெசியாள் விக்னேஷை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இந்த திருமணத்திற்கு கெசியாள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே திருமணத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால் திருமணம் நடந்த பின் அடிக்கடி கெசியாள் மீது கோபம் அடைந்து சண்டை போட்டு இருக்கிறார் விக்னேஷ். கெசியாள் தொடர்ந்து கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரியில் ஆண் நண்பர்களுடன் பேசுவதை பார்த்து கோபம் அடைந்த விக்னேஷ் கெசியாள் மீது சந்தேகம் அடைந்துள்ளார்.
கெசியாள் நடத்தை மீது கடுமையாக சந்தேகப்பட்டு உள்ளார். தினமும் கெசியாளிடம் கேள்வி கேட்டு அவரை அடித்து தொல்லை செய்துள்ளார். அதோடு விக்னேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகி உள்ளார்.
சந்தேகப்பட்டு வந்து குடித்துவிட்டு அடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதோடு கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கும் விக்னேஷ் அடிமையாகி இருக்கிறார். ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் கெசியாள் தனது தங்கையிடம்தான் போய் விஷயத்தை சொல்லி உள்ளார்.
அம்மா வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வந்ததால் அவரிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை. இதையடுத்து சில நாட்கள் கெசியாள் தனது தங்கையின் வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கும் வந்த விக்னேஷ் தங்கையின் கணவன், மாமனாரை அடித்து போட்டுவிட்டு அங்கிருந்து கெசியாளை அழைத்து சென்றுள்ளார்.
இதன்பின் ஒருநாள் நைட்டியோடு இருந்த கெசியாளை ரூட்டில் இழுத்து போட்டு விக்னேஷ் சரமாரியாக அடித்து உள்ளார். ஊரில் இருக்கும் எல்லோரும் பார்க்கும் விதமாக குடித்துவிட்டு வந்து மிக மோசமாக தாக்கி இருக்கிறார். இதில் நைட்டி கிழிந்து சாலையிலேயே அரை நிர்வாணமாக கெசியாள் கிடந்துள்ளார்.
அங்கு இருந்த சிலர் இதை வீடியோவும் எடுத்து உள்ளனர். இந்த வீடியோவை கெசியாள் தனது தங்கைக்கும் அனுப்பி உள்ளார். ஆனால் அப்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கெசியாளுக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் காணும் பொங்கல் அன்று இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. காணும் பொங்கல் விழாவிற்கு அழைத்து செல்லவில்லை என்று இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்து உள்ளது.
இதில் நடந்த மோதலில் கெசியாள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவன் தன்னை மோசமாக தாக்கியதால் சோகத்தில் கெசியாள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கெசியாள் உறவினர்களோ.. இதைவிட மோசமான சண்டை நடந்த போதெல்லாம் கெசியாள் தற்கொலை செய்துகொள்ளவில்லை.
அவள் திடமாக இருக்க கூடியவர். அப்படி இருக்கும் போது அவர் இப்போது தற்கொலை செய்து கொண்டு இருக்க வாய்ப்பே இல்லை. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட சம்பவம் என்று கெசியாளின் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த தொடர்பாக விக்னேஷிடம் கெசியாளின் அத்தை கோபமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த விக்னேஷ் குடித்துவிட்டு, கெசியாளின் அத்தை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்துள்ளனர்.