இலங்கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு தரச்சான்றிதழ் தலைக்கவசம்!!

597

MC

இலங்கையில் மோட்டார் சைக்கள் ஓட்டிகள் பயன்படுத்தும் முகத்தை மூடிய தலைக்கவசத்திற்கு சர்வதேச தரம் பேணப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வீதி பாதுகாப்பு தேசிய குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.

அண்மையில் இந்தக்குழு, பொலிஸ் மற்றும் இலங்கை தரச்சான்றிதழ் நிறுவக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கள் பயன்படுத்தும் தலைக்கவசத்திற்கு எஸ்எல்எஸ் முத்திரை பெறப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

இதன்படி குறித்த தலைக்கவசங்கள் முழுமையாக முகத்தை மூடிய நிலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் தலையை முழுமையாகவும் முகத்தில் ஒருபகுதியை மூடியதாகவும் அமைய வேண்டும் என்று இந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத்தை பயன்படுத்தி குற்றச்செயல்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையிலான யோசனைகளும் கலந்துரையாப்பட்டன. இந்தநிலையில் இது தொடர்பில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.