ஆபாசப் படத்தை காண்பித்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!!

595

Abuseஒன்பது வயது சிறுமிக்கு ஆபாச காணொளியை காண்பித்து பின், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை தங்கொடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதானவர் தங்கொடுவ – கோடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும், சந்தேகநபரும் அயல் வீட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் கடந்த 15ம் திகதி குறித்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆபாச காணொளியை போட்டுக் காண்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக மாரவில ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.