பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது!!

531

A6

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இணைந்த சுகாதார மாணவர் ஒருவரை கைதுசெய்யச் சென்ற வேளை அதற்கு இடையூறு விளைவித்த 13 மாணவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை மேலும் 4 மாணவர்கள் கைதானதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இணைந்த சுகாதார கற்கை நெறியின் கால அளவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுடன் பெற்றோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.