கீழ்ப்பாக்கத்தில்..

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூன்று அடுக்கு கட்டிடத்தில் பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த துணிக்கடையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஷங்கர் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் அந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு ஹரிணி, ஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

தினமும் சங்கர் வேலையை முடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் இந்தப் பகுதியிலிருந்து கிளம்பி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் மனைவி வாணி மற்றும் 5 வயது மகள் ஹரிணி ஆகியவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது துணிக்கடையின் வாசலில் இருக்கக்கூடிய இரும்பு கேட் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் இரும்பு கேட்சிறுமி மேலே விழுந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த சிறுமி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட காரணமாக துணிக்கடையானது மூடப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.





