திமுகவின் படுதோல்விக்கு காரணம் என்ன : குஷ்பு பரபரப்புப் பேட்டி!!

815

Kushbooமக்களவைத் தேர்தலில், திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் ஆலோசனை நடந்துள்ளது. நடிகை குஷ்பு நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு வெளியே வந்த குஷ்பு பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

கேள்வி: திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து தங்களுடைய கருத்து என்ன?

பதில்: திமுக ஆட்சியில் இருந்தபோது 2004 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். தற்போது நிச்சயமாக நேரம் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும் என்றார்.

கேள்வி: திமுகவின் பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா?

பதில்: அப்போது 2004ல் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு ஊழல்தான் காரணம் என்று சொல்லுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.