இறுதிச் சடங்கில் எழுந்து உட்கார்ந்த 102 வயது மூதாட்டி.. தெறித்து ஓடிய உறவினர்கள்!!

452

உத்தராகண்ட்டில்..

கல்யாண சாவுன்னு சொல்வாங்க இல்லையா? அப்படி 102 வயதுடைய பாட்டி ஒருவர் மரணித்ததும், கல்யாண சாவாகவே உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லி, தனது தாயின் இறுதி பயணத்தை தடபுடலாக செய்து,



சுடுகாட்டிற்கு இறந்த தாயாரின் உடலை எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிலையில், திடீரென பாடையில் இருந்து எழுந்து அமர்ந்து அத்தனைப் பேரையும் தெறிக்க விட்டுள்ளார் ஞானதேவி.

உத்தராகண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவரது தாயார் ஞான தேவி (102). கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஞானதேவி, திடீரென மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார்.

உடனடியாக குடும்பத்தினர் மருத்துவரை அழைத்து பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர் பரிசோதித்து விட்டு, அறிவித்தார். இந்த செய்தியால் குடும்பத்தினர், நல்லா வாழ்ந்த மனுஷி.. ரொம்ப சிறப்பா அடக்கம் செய்யணும் என்று தாயின் மரணம் குறித்து உறவினர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, ஏராளமானோர் வீட்டில் திரண்டு இறுதிச் சடங்கிற்கு தயாராகினர். மகன் வினோத் குமார் கூறுகையில், “அம்மாவின் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குடும்பத்தினர் முடித்து விட்டனர், மேலும் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடலைகப் பாடையிலும் கிடத்தி இருந்தோம்.

அப்போது திடீரென அம்மாவின் உடலில் சலனம் ஏற்பட்டது. கொஞ்சம் குலுங்கியதும் அம்மா கண்களைத் திறந்தார். இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் வியந்து ஆச்சர்யத்தில் உறைந்தோம். சில உறவினர்கள் பயத்தில் தெறித்து ஓடினார்கள்.

அம்மாவுக்கு சுயநினைவு வந்தவுடனே, அந்தச் சூழல் முழுவதும் சந்தோஷமாக மாறியது” என்று கூறினார். அவளுடைய அம்மா குடும்பத்தில் மட்டுமல்ல, முழு கிராமத்திலும் மூத்தாட்டி உயிர்த்தெழுந்ததை கொண்டாடுகிறது.

சுயநினைவு திரும்பிய பிறகு, அவரது தாய் பழைய படி சாதாரண உணவை சாப்பிட்டு வருகிறார். மொத்த கிராமமும், செத்து பிழைச்ச பாட்டியை ஆச்சர்யத்துடன் வந்து பார்த்து, ஆசி வாங்கி செல்கிறது.