முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு : கொலையா அல்லது தற்கொலையா?

711

முல்லைத்தீவில்..

புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்க வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்துனரான,



ராயன் என்பவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞனின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று முழுமையான தகவல்கள் என்னும் கிடைக்கவில்லை.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் கொலையா அல்லது தற்கொலையா என புதுக்குடியிருப்பு போலீசாரால் விசாரணைகள் நடைபெறுகின்றன.