உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம் : இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!!

721

துருக்கி..

துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துருக்கிக்கான இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை அவர் மகள் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிக்கா ராஜபக்ச என்ற குறித்த பெண், கலகெதர பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் துருக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வால் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.