தென்காசியில்..
தென்காசியில் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். சிறை காவலர். இவரது குழந்தைகள் நேற்று பள்ளி செல்வதற்காக புறப்பட்டு ஷூ மாட்டுவதற்காக அதனை எடுத்த போது,
ஷூவுக்குள் பாம்பு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் வந்து பார்த்து சங்கரன்கோவிலைச் சேர்ந்த பாம்பு மீட்பாளர் பரமேஸ்வரதாசுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற அவர், ஷூவுக்குள் பதுங்கி இருந்த கொம்பேறிமூக்கன் பாம்பை உயிருடன் பிடித்துச் சென்றார். குழந்தைகள் நூழிலையில் உயிர் தப்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.