வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவால் தெளிவூட்டல்!!

722

தேர்தல் கண்காணிப்பு..

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரியவினால் இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.



இந் நிகழ்வானது வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள அப்ரியல் அமைப்பின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (15.02) மாலை இடம்பெற்றது.

இதன்போது, உள்ளுராட்சி தேர்தலின் நடைமுறைகள், வேட்பாளர்களின் செயற்பாடுகள், தேர்தல் முறைகேடுகளை அவதானிக்கும் வழிமுறைகள், சமூக ஊடகங்கள் ஊடான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்,

அரச சொத்துக்களை பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடப்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், இளைஞர், யுவதிகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.

இதில் அப்ரியல் அமைப்பின் இயக்குனர், இயக்குனாத் சபை உறுப்பினர்கள், அப்ரியல் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வியூ) அமைப்பின் பல்வேறு மாவட்டங்களுக்குமுரிய கண்காணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.