நடு வீதியில் சகோதரிகள் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

401

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த இருதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.

செல்வத்தின் மகள்களான தமிழரசி (19), தமிழ்ப்பிரியா (17) ஆகிய இருவரும் பி.பார்ம் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14) பிற்பகலில் சகோதரிகள் இருவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த,



முனிராஜ் என்பவரது மகன் அம்பேத்வளவன் (12) சின்ற சிறுவனுடன் சேர்ந்து, பைக்கில் தேன்கனிக் கோட்டையில் இருந்து அய்யூர் சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக கோழிப் பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த ஈச்சல் லாரி ஒன்று, சாப்பிரானப் பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பைக்கில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

லாரி பயங்கரமாக மோதியதிலும், கீழே விழுந்ததிலும் சகோதரிகள் மற்றும் சிறுவன் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு கதறி அழுதனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றன. மேலும் இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.