முதலாவது ஒருநாள் போட்டியில் 81 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி!!

467

SL

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றநிலையில் இன்னிங்சை இடைநிறுத்தியது.

இந்தநிலையில் மழை காரணமாக போட்டி 32 ஓவர்களாக குறைக்கப்பட்டதோடு, இலங்கை அணிக்கு 226 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அணி 27.5 ஓவர்களில் 144 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனால் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.