மோடி பதவியேற்பு விழாவிற்குச் செல்ல வருமாறு வட மாகாண முதல்வருக்கு ஜனாதிபதி அழைப்பு!!

592

Makintha

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்விற்குச் செல்லும் தான் உள்ளிட்ட குழுவுடன் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள போதும் தான் இந்தியா செல்வது உறுதி என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.